பெண்களே உங்களுடைய சருமம் அழகாக மின்னனுமா அப்ப இந்த டிப்ஸ பாலோ பண்ணுங்க !

பெண்கள் அவர்களின் சருமத்தை பாதுகாக்க பல வகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.குறிப்பாக

By Priya | Published: Jul 01, 2019 02:37 PM

பெண்கள் அவர்களின் சருமத்தை பாதுகாக்க பல வகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.குறிப்பாக அவர்களின் சருமத்தை பாதுகாக்க அதிக அளவில் செலவிடுவதும் வழக்கம்.இந்நிலையில் தற்போது பெண்களின் சருமத்தை பாதுகாக்க என்னென்ன வகையான வழிமுறைகளை பின்பற்றலாம் என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். பெண்கள் சருமத்தை பாதுகாக்க  சரியான உணவு பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம். மேலும் பல சத்தான உணவு பொருட்களை உணவில் சேர்ந்து கொள்ள வேண்டியதும் மிகவும் முக்கியமாகும்.

ஜிங்க் :

ஜிங்க்கில் இருக்கும் ஆன்டிஆக்சிஜன்கள் நமது உடலில்  உள்ள நச்சு தன்மைகளுக்கு எதிராக போராடும் குணம் படைத்தது. மேலும் ஜிங்க் சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்க உதவும்.நமது சருமம் வயதான தோற்றமடைவதை தடுக்க உதவுகிறது. எந்த எந்த பொருள்களில் ஜிங்க் நிறைந்து காணப்படுகிறது என்பதை பார்க்கலாம்.

முந்திரி :

  முந்திரியில் நமது உடலுக்கு தேவையான  ஊட்ட சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகிறது.மேலும் நமது உடலுக்கு தேவையான மெக்னீசியம், இரும்பு சத்து, ஆரோக்கியமான கொழுப்புகளும் காணப்படுகிறது.

ஓட்ஸ் மற்றும் குயினோ:

நாம் அன்றாடம் உணவில் ஓட்ஸ் மற்றும் குயினோ பொருட்களை உணவில் சேர்ந்து கொள்வதால் என்றும் இளமையாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் இருக்கலாம். ஓட்ஸ்  மற்றும் குயினோ பொருட்களிலும் அதிக அளவு ஜிங்க் நிறைந்து காணப்படுகிறது.

பயிறு வகைகள் :

உடலுக்கு தேவையான பலவிதமான ஆற்றல்களை கொடுப்பதில் பயிறு வகைகள் முக்கிய பங்கு வகிக்கிறது.மேலும் இதில் அதிக அளவு ஜிங்கும் காணப்படுகிறது.

இறைச்சி :

  ஜிங்க் ஊட்ட சத்து அதிகம் நிறைந்து காணப்படும் உணவு வகைகளில் ஒன்று இறைச்சி. சிக்கன் சாப்பிடுவதற்கு பதிலாக மட்டன் சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது.    
Step2: Place in ads Display sections

unicc