சிறுநீரகத்தை பாதுகாப்பாக வைத்து கொள்ள நாம் கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகள் !

நமது உடலில் இருக்கும் முக்கிய உறுப்புகளில் ஒன்று சிறு நீரகம்.இந்த சிறுநீரகத்தின்

By Fahad | Published: Mar 28 2020 06:43 PM

நமது உடலில் இருக்கும் முக்கிய உறுப்புகளில் ஒன்று சிறு நீரகம்.இந்த சிறுநீரகத்தின் செயல் படு நின்று விட்டால் நாம் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு பின்பு இறப்பு கூட நேரிடலாம். இந்த பதிப்பில் நாம் எவ்வாறு சிறுநீரகத்தை பாதுகாப்பது என்பதை பற்றி படித்தறியலாம்.

தண்ணீர் :

சிறுநீரகத்தை நாம் எந்த அளவு தண்ணீர் குடிக்கிறோமோ அந்த அளவு நமது சிறுநீரகம் நன்றாக வேலை செய்யும்.மேலும் சிறுநீரகத்தை பாதுகாப்பாக வைப்பதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆப்பிள் சீடர் வினிகர்:

ஆப்பிள் சீடார் வினிக்கரை தேனுடன் கலந்து பருகி வந்தால் மிகவும் நல்லது. அது நமது உடலுக்கு பலவகையான சத்துக்களையும் கொடுக்கிறது.இது சிறுநீரக செயல்பாட்டிற்கும் மிகவும் நல்லது.மேலும் நமது உடலில் பல கெட்ட கொழுப்புகளை நீக்கும்.

பழ ஜூஸ் :

தினமும் ஒரு பழ ஜூஸ் குடித்து வந்தால் நமது உடலுக்கு மிகவும் நல்லது. அது சிறுநீர செயல்பாட்டிற்கும் பேருதவி புரியும்.

மூலிகை டீ :

துளசி மற்றும் புதினா டீ குடித்து வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு மட்டுமல்லாமல் சிறுநீரக செயல்பாட்டையும் நன்றாக ஊக்குவிக்கும் திறன் படைத்தது.

கற்றாழை :

கற்றாழை நமது உடலுக்கு மிகவும் குளிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது. மேலும் கற்றாழை சிறுநீரக செயல்பாட்டை நன்கு ஊக்குவிக்க கூடியது.  

More News From herbal tea