ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

இன்று  ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை

By Fahad | Published: Apr 06 2020 01:07 AM

இன்று  ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்  வெளியிட்டுள்ள அறிவிப்பில், ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் நெல்லையில் இன்றும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது .குமரிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24மணி நேரம் பொருத்தவரை வெப்பசலனம் காரணமாக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும்,உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் கடலூர், நாகப்பட்டினம்,தஞ்சாவூர், திருவாரூர்,புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுவை ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளது.