5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை மண்டல ஆய்வு மையம்

  • 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.   
  • சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

சென்னை வானிலை மண்டல ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர்,புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தென்மேற்கு வங்ககடலில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது . முதல் நாள் தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர மாவட்டங்களில் லேசான மழையும், இரண்டாம் நாள் கடலோரம் மற்றும் தென்மேற்கு வங்ககடலில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

அடுத்த 24மணி நேரம் சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு எனவும் இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.