4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்

4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம்

By venu | Published: Nov 25, 2019 01:31 PM

4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில்,  வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது .சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. குமரி கடல் பகுதியில் 2 நாட்களுக்கு சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  
Step2: Place in ads Display sections

unicc