கனமழை எச்சரிக்கை! முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு

கனமழையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆட்சியர்களுக்கு

By venu | Published: Oct 21, 2019 11:46 AM

கனமழையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி  உத்தரவிட்டுள்ளார். தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், அங்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள தென் மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மழை, அணைகளின் நிலவரங்கள் குறித்து சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும என்று தெரிவித்துள்ளார்.நிவாரண மையங்களில் மக்களை தங்க வைக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் பருவ மழையின் தாக்கத்தை உன்னிப்பாக கவனித்து, தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc