இதயம் நொறுங்கியது.! கங்குலியை பிரிந்தது ஏன்.? 18 ஆண்டுகள் கழித்து மனம் திறந்த பிரபல நடிகை.!

Heart broken.! Why Ganguly split? Famous actress who opened her mind 18 years later!

  • 2003-ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக கங்குலி இருந்தபோது அவரும் நடிகை நக்மாவின் காதலிப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது.
  • 18 ஆண்டுகள் கழித்து மனம் திறந்துள்ள நடிகை நக்மா மற்றவர்களின் பார்வை எங்களை புண்படுத்தியதால், இருவரும் சேர்ந்து பேசி பிரிவது என்று முடிவெடுத்து பிரிந்துவிட்டோம் என தெரிவித்தார்.
2003-ம் ஆண்டின் இந்திய அணியின் தலைவராக கங்குலி இருந்தபோது அவரும் நடிகை நக்மாவும் காதலிப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் கங்குலி விளையாடும் போட்டிகளை பார்ப்பதற்கு நக்மா தவறாமல் வந்து விடுவார், இருவரும் சேர்ந்து அவ்வப்போது பொது இடங்களில் ஒன்றாக சென்று வந்தனர். இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியான நிலையில் இருவரும் திடீரென பிரிந்தனர். இந்நிலையில், 18 ஆண்டுகள் கழித்து இதுகுறித்து மனம் திறந்துள்ள நடிகை நக்மா எனக்கும் கங்குலிக்கும் இடையேயான நட்பு மிகவும் அழகானது. பின்னர் எங்கள் இருவருக்குமான நட்பு நெருக்கத்தில் இருந்த சமயத்தில் அவரது விளையாட்டு பாதிக்கப்பட்டதாக பல விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருந்தது. ஆனால் எங்களுடைய நட்புதான் கங்குலியின் ஆட்டத்தைப் பாதித்தது என்று பத்திரிகைகளில் எழுதப்பட்டது. இதனால் மிகவும் நான் சோகத்தில் தள்ளப்பட்டேன், இதயம் நொறுங்கிப்போனது. மேலும் நக்மா கூறுகையில், மற்றவர்களின் பார்வை எங்களை புண்படுத்தியதால், இருவரும் சேர்ந்து பேசி பிரிவது என்று முடிவெடுத்து பிரிந்துவிட்டோம் என தெரிவித்தார். சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டம் எதிராக கங்குலி மகள் சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்தை பதிவிட்டிருந்தார். இதற்கு கங்குலி, தனது டிவிட்டர் பக்கத்தில், எனது மகள் சின்ன பொண்ணு, அவளுக்கு இங்கு நடக்கும் அரசியல் பற்றி தெரியாது, என பதிவிட்டு இருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக மகிலா காங்கிரஸ் பிரமுகரும் முன்னாள் நடிகையுமான நக்மா, தனது டிவிட்டர் பக்கத்தில், கருத்துக்களை சுதந்திரமாக பதிவிட அனுமதியுங்கள், அவளை பாராட்டுங்கள் என கங்குலியை டேக் செய்தும், வாழ்த்துக்கள் கூறி சனாவை டேக் செய்தும் தனது கருத்தை டிவிட்டரில் தெரிவித்தார். தற்போது கங்குலி பிசிசிஐயின் தலைவர் பதிவில் இருக்கிறார் என குறிப்பிடப்படுகிறது.