காலையில் வெறும் வயிற்றில் துளசி சாப்பிட்டால் என்ன விதமான நன்மைகள் கிடைக்கும்..?

அந்த காலத்தில் பலரின் வீட்டு முற்றத்திலும் துளசி செடி வைக்கப்பட்டிருக்கும். இது மருத்துவ முறையிலும் தெய்வீக தன்மையாகவும் மக்களுக்கு பயன்பட்டது. துளசியை பற்றி நமக்கு தெரிந்தது- சளி, இரும்பலை போக்கும் என்பது தான்.

ஆனால், இதை தாண்டியும் இவை பலவித நன்மைகளை நமக்கு தருகின்றன. சர்க்கரை நோய், கல்லீரல் கோளாறு போன்ற பலவித பிரச்சினைகளுக்கு தீர்வை தருகிறது. எப்படி துளசி இவ்வளவு பயன்களை தருகிறது என்பதை இனி அறிவோம்.

இரத்த ஓட்டம்
துளசியை அன்றாடம் சாப்பிட்டு வந்தால் உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். உடலில் ரத்த ஓட்டத்தை சரியான அளவில் உற்பத்தி செய்து கொடுப்பதற்கு இது உதவுகிறதாம். இந்த தன்மைக்கு காரணம் துளசியில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்ஸ்கள் தான்.

சர்க்கரை நோய்
தொடர்ந்து துளசி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் உங்களை அண்டாது என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. மேலும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் குறைத்து, இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறதாம்.

கல்லீரல்
கல்லீரல் பிரச்சினைக்கு சிறந்த தீர்வை தர கூடிய ஆற்றல் துளசியில் உள்ளது. இதன் மருத்துவ குணம் கல்லீரலில் உள்ள நச்சு தன்மை கொண்ட அழுக்குகளை நீக்கி விடுமாம். கூடுதலாக செரிமானத்தையும் சிறப்பாக வைக்கும்.

சிறுநீரக கற்கள்
சிறுநீரகத்தில் கற்கள் உருவாக முதல் காரணமாக உள்ள யூரிக் அமிலம் மற்றும் கால்சியம் ஆக்சலேட் ஆகியவற்றை குறைக்க கூடிய தன்மை இதற்குண்டு. இத்துடன் சிறுநீரகத்தின் செயல்திறனையும் வேகமாக நடத்துமாம்.

புற்றுநோய்
புற்றுநோய் செல்களை உருவாகாமல் தடுக்கும் தன்மை இதற்கு உள்ளதாம். antioxidant மற்றும் anti-carcinogenic தன்மை புற்றுநோயில் இருந்து உங்களை காத்து விடும் என ஆய்வுகள் சொல்கின்றன. குறிப்பாக மார்பக புற்றுநோய் மற்றும் வாய் புற்றுநோயில் இருந்து காக்கும்.

எதிர்ப்பு சக்தி
துளசியை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் எளிதாக எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். இவை சளி, இரும்பல் போன்றவற்றில் இருந்து நம்மை காக்கும். எனவே, தினமும் 5 துளசி இலையை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வாருங்கள்.

Leave a Comment