போதையில் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர்..!

  • மதுரையில் உள்ள ஒரு ஊராட்சி பள்ளியில் தலைமை ஆசிரியர் மது போதையில் பள்ளிக்கு வந்தார்.
  • இதனை அறிந்த பெற்றோர், குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

மதுரை மாவட்டம், மேலூர் கொட்டாம்பட்டி அடுத்து உள்ளது வலைச்சேரிப்பட்டி. அங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி இன்று செயல்பட்டு வருகிறது. 23 மாணவர்கள் பயின்று வரும் அந்த பள்ளியில் கோட்டாம்பட்டியை சேர்ந்த சரவணன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும், குமரேசன் என்பவர் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் பள்ளியின் உதவி ஆசிரியரான குமரேசன், ஒருவாரகாலமாக மருத்துவ விடுப்பில் உள்ளார். இதனையடுத்து, பள்ளியின் தலைமை ஆசிரியரான சரவணன், பள்ளிக்கு மது போதையில் வந்துள்ளார். மேலும், அங்குள்ள ஊழியர் ஒருவரிடம் போதையில் தாம் வாங்கி வந்த அசைவ உணவகத்தை “வேண்டுமா வேண்டுமா?” என கேட்டுள்ளார்.

தலைமை ஆசிரியர் செய்த இந்த செயலை அவர் கிராம மக்களிடம் கூறியுள்ளார். இதனைக்கேட்டு பதறி போன பெற்றோர்கள், தங்களின் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து சென்றனர். மேலும் இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், சரவணன் பலமுறை இதுபோல செய்துள்ளார் எனவும், இதுகுறித்து புகாரளிதாகவும் கூறினார்கள்.

இதுகுறித்து சரவணன், தான் மீது இந்தப்பள்ளியில் பணிபுரியும் ஊழியர்கள் வீண் பலி சுமத்துவாக கூறினார்.