சபரிமலைக்கு வந்த 2 பெண்களை திருப்பி அனுப்பினார்..!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்வதற்கு பல ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தடையை ரத்து செய்தது. இதனால் அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற நிலை உருவானது.
இதை தொடர்ந்து கடந்த ஆண்டு சபரிமலை பெண்கள் சென்றதால் பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டது .இதை தொடர்ந்து  உச்ச நீதிமன்றம் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலே அமர்வு விசாரித்தது.அந்த அமர்வு 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது.அதில்சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பதா ?அல்லது வேண்டாமா ? என்பது குறித்து தீர்ப்பில் குறிப்பிடவில்லை.
இதை தொடர்நது  இந்த ஆண்டு சபரிமலைக்கு வரும் பெண்களை அனுமதிக்க மாட்டோம் என கேரள அரசு அறிவித்தது. மேலும் நீதிமன்ற அனுமதியுடன் வரும் பெண்களை மட்டுமே பாதுகாப்புடன் அனுமதிப்போம் என கூறியது.
நேற்று முன்தினம் சபரிமலைக்கு வந்த 10-க்கும்  மேற்பட்ட பெண்களை போலீசார் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் நேற்று ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த 2 பெண்களை  போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீஸ் நடத்திய சோதனையில் சான்றிதழை சரிபார்க்கும் போது 50 வயது குறைவாக இருந்ததால்  இருவரையும்  அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர்.

author avatar
murugan