சவுகிதார் பட்டம் இனி வேண்டாம் ! பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் எம்.பி. உதித்ராஜ்

பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் எம்.பி. உதித்ராஜ்.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி,ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6-ஆம் தேதி,ஆறாம் கட்ட தேர்தல் மே 12-ஆம் தேதி,ஏழாம் கட்ட தேர்தல் மே 26-ஆம் தேதி நடைபெற உள்ளது.இதில் மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர்  டெல்லி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் டெல்லியில் வடமேற்கு தொகுதியில் தற்போது உதித்ராஜ் எம்.பி-யாக உள்ளார்.ஆனால் இந்தமுறை அவருக்கு போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.இதனால் அவர் கடும் அதிருப்தி அடைந்தார்.மேலும் பாஜகவில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.

இந்நிலையில் இன்று பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் எம்.பி. உதித்ராஜ்.இது பாஜகவிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் அடைமொழியாக  வைத்திருந்த சவுகிதார் என்ற பெயரையும் நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment