தன் தலை முடியை தானமாக கொடுத்த கேரளா பெண் அதிகாரி..! எதற்கு தெரியுமா ..?

கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்த அபர்ணா லவகுமார். இவர் சிவில் பெண் காவல்  

By murugan | Published: Sep 29, 2019 08:15 AM

கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்த அபர்ணா லவகுமார். இவர் சிவில் பெண் காவல்   அதிகாரியாக உள்ளார். கேரளா பெண்களுக்கு முடியே தனி அழகுதான். அபர்ணாவிற்கு தலை முடி முழங்கால் வரை இருக்கும். இந்நிலையில் தன்னுடைய தலை முடியை புற்றுநோயாளிகளுக்கு காணிக்கையாக  அளித்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் அதிகாரி அபர்ணா கூறுகையில், ஹீமோதெரபி சிகிச்சைக்கு பின்னர் தலைமுடி இல்லாமல் வாடும் புற்றுநோயைகளை பார்த்த பிறகுதான் இந்த  முடிவு செய்தேன். புற்று நோயால் பாதிக்கப்படும் குழந்தைகள் உடன் படிக்கும் மற்ற குழந்தைகள் கிண்டல் செய்கிறார்கள். இதனால் அந்த குழந்தைகள் மனம் உடைந்து போகிறார்கள்.  அவர்களுக்காகத் தான் இந்த முடிவு என கூறினார். பெண் அதிகாரி அபர்ணாவின்  இந்த செயலுக்கு காவல்துறை மற்றும் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Step2: Place in ads Display sections

unicc