மனிதனாக இருப்பதுதான் அவர் செய்த குற்றம்.! ஜாமியா மாணவருக்காக வருந்திய ஹர்பஜன்.!

  • சிலநாள்களுக்கு முன் ஜாமியா மிலியா மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் மினாஜுதின் என்ற மாணவர் தனது இடது கண் பார்வையை இழந்தார்.
  • இது குறித்து ஹர்பஜன்சிங் மனிதனாக இருப்பதுதான் அவர் செய்த குற்றம் .தனக்கு நடந்த கொடுமையை அவர் கூறும்போது கேட்பதற்கு வருத்தமாக உள்ளது.

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவையிலும் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. எதிர்கட்சிகள் இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா எதிர்ப்பு தெரிவித்து அசாம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடந்தி வருகின்றனர்.

சிலநாள்களுக்கு முன் காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் மினாஜுதின் என்ற மாணவர் தனது இடது கண் பார்வையை இழந்தார். இதுதொடர்பாக மினாஜுதின் ட்விட்டரில் ஒருவீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இது குறித்து ஹர்பஜன்சிங் கூறுகையில், மனிதனாக இருப்பதுதான் அவர் செய்த குற்றம் .தனக்கு நடந்த கொடுமையை அவர் கூறும்போது கேட்பதற்கு வருத்தமாக உள்ளது.டெல்லியில் நடக்கும் சம்பவம் மிகுந்த வருத்தத்தை தருகிறது.இது நிறுத்தப்பட வேண்டும் என அவர் பதிவிட்டு உள்ளார்.

author avatar
murugan