ரூ.37.5 கோடி மதிப்புள்ள 500 வெண்டிலேட்டர்களை வழங்கிய HCL நிறுவனம்

ரூ.37.5 கோடி மதிப்புள்ள 500 வெண்டிலேட்டர்களை வழங்கியது  HCL நிறுவனம். கொரோனா வைரஸ்

By venu | Published: Apr 01, 2020 05:35 PM

ரூ.37.5 கோடி மதிப்புள்ள 500 வெண்டிலேட்டர்களை வழங்கியது  HCL நிறுவனம்.

கொரோனா வைரஸ் அதிகமாவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்களிடம் நிதியுதவி கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பு பணிக்காக விருப்பம் உள்ளவர்களை நிதி அளிக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஹெச்.சி.எல்(HCL) நிறுவனம் ரூ.37.5 கோடி மதிப்பில், 500 வென்டிலேட்டர்களை தமிழக அரசுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது .மேலும் இந்த உதவிக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

 

 

Step2: Place in ads Display sections

unicc