நாளை அனந்தசரஸ் குளத்தை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு !

நாளை அனந்தசரஸ் குளத்தை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு !

காஞ்சிபுரத்தில் வசந்த மண்டபத்தில் அத்திவரதர் 37 நாள்களாக பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.முதல் 31 நாள்கள் சயன கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் தற்போது நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் சிலை வைக்கப்பட்டு இருந்ததால் குளத்தை தூர்வார முடியவில்லையென சென்னை மாம்பலத்தை  சார்ந்த அசோக் என்பவர் உயர்நிதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின் போது அத்திவரதர் சிலை எடுப்பதற்கு முன்பாகவே குளத்தை தூர்வாரி விட்டதாக இந்து அறநிலையந்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து குளத்தை ஆகஸ்ட் 7-ம் தேதி நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை கொடுக்கும் படி அரசு வழக்கறிஞர் இருவருக்கும் உயர்நிதிமன்றம் உத்தரவு விட்டு உள்ளது.

author avatar
murugan
Join our channel google news Youtube