சென்னை சிட்லபாக்கத்தில் நேற்று புது அஞ்சலகம் திறக்கப்பட்டது...!

சென்னை தாம்பரம் அருகில் ஹஸ்தினாபுரம் மற்றும் சேலையூரின் சில பகுதிகள் பிரிக்கப்பட்டு

By Dinasuvadu desk | Published: Mar 11, 2018 12:11 PM

சென்னை தாம்பரம் அருகில் ஹஸ்தினாபுரம் மற்றும் சேலையூரின் சில பகுதிகள் பிரிக்கப்பட்டு சிட்லபாக்கத்தில் நேற்று புது அஞ்சலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் தென் சென்னையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ஜெயவர்தன், தமிழ்நாடு அஞ்சலகத்துறை இயக்குனர் உயர்திரு.எம்.சம்பத் IPoS, சென்னை மாநகர அஞ்சலகத்துறை இயக்குனர் உயர்திரு.ஆர்.ஆனந்த் IPoS ஆகியோர் பங்கெடுத்தனர். இதன் முதற்கட்டமாக அரசு பள்ளியில் பயிலக்கூடிய 182 பெண் குழந்தைகளுக்கான SSA கணக்கானது (Account) நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ஜெயவர்தன் பங்களிப்பின் மூலமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த  அஞ்சலகத்தின் பின் கொடு நம்பர் 600131 ஆகும்.
Step2: Place in ads Display sections

unicc