காஷ்மீர் விவகாரம் அது ஒரு சமூகத்தின் பிரச்சினை என கூறியதால் நிதியமைச்சர் பதவி நீக்கம்..

காஷ்மீர் மாநிலத்தின் நிதியமைச்சரான ஹஸீப் ட்ராபு (Haseeb Drabu),காஷ்மீர்  விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்ததால் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி, பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மாநிலத்தின் நிதியமைச்சராக இருந்த ஹஸீப் ட்ராபு, காஷ்மீர் விவகாரம் ஓர் அரசியல் பிரச்சினை அல்ல என்றும், அது ஒரு சமூகத்தின் பிரச்சினை என்றும் தெரிவித்தார்.

இதற்கு, பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இதன் எதிரொலியாக, ஹஸீப் ட்ராபுவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி ஆளும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும்,  முதலமைச்சருமான மெகபூபா முப்தி உத்தரவிட்டுள்ளார். ஹஸீஸ் ட்ராபு ஜம்மு காஷ்மீர் வங்கியின் தலைவராக இருந்தவர் ஆவார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment