ஹரியானாவில் மீண்டும் பாஜக ஆட்சி!? பெரும்பாண்மை கிடைக்காவிட்டாலும் உரிமை கோர உள்ள முதல்வர் கட்டார்!

ஹரியானாவில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தற்போது பெரும்பாலான தொகுதிகளின் ரில்சட் வந்துவிட்டது. இதில் ஆளும் பாஜக 40 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 31 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
ஹரியானாவில் ஆட்சியமைக்க அங்கு உள்ள 90 தொகுதிகளில் 46 தொகுதிகளை கைப்பற்றி இருக்க வேண்டும். ஹரியானாவில் ஜனாயக் ஜனதா தளம் 10 இடங்களை கைப்பற்றியுள்ளது. சுயேச்சையாக 6 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளனர். 1  தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.  மற்ற கட்சிகள் 2 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளன.
ஆதலால், ஹரியானாவில் கூட்டணி அமைத்து மீண்டும் ஆட்சியமைக்க ஆளும் பாஜக முதல்வர் மனோகர் லால் காத்தார் ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர்யாவை சந்தித்து, உரிமை கோர உள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.