ஹர்ஷவர்தன் WHO அமைப்பின் நிர்வாக குழு தலைவராக பொறுப்பேற்றார்.!

ஹர்ஷவர்தன் WHO அமைப்பின் நிர்வாக குழு தலைவராக பொறுப்பேற்றார்.!

உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு தலைவராக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் பொறுப்பேற்றுள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் குழுவில் 34 உறுப்பினர்களாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிர்வாக குழுவிற்கு தலைவராக ஜப்பான் நாட்டை சேர்ந்த ஹிரோகி என்பவரின் பதிவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய நிர்வாக குழு தலைவராக இந்தியாவை சேர்ந்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்த்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான ஒப்பந்தத்தில் 194 நாடுகள் கையெழுத்திட்டு ஹர்ஷவர்தனை தேர்வு செய்தனர். மேலும்,  இந்த நிர்வாக வாரியத்தலைவர் தேர்வு வருடத்திற்கு ஒருமுறை பிராந்திய குழுக்களிடையே சுழற்சி முறையில் நடைபெறும். 

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில், தற்போது உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழு தலைவராக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் பொறுப்பேற்றுள்ளார். இவரின் பதவிக்காலம் அடுத்த 3 ஆண்டுகள் வரை தொடரும். WHO அமைப்பின் நிர்வாக வாரிய தலைவர் தேர்தல் குறித்து கடந்த வருடம் மே மாதம் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தியாவிலிருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற முடிவின் பெயரில் ஹர்ஷவர்தன் தேர்வு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube