மீண்டும் தமிழில் ரிமேக் ஆகும் விஜய் தேவரகொண்டாவின் 'சூப்பர் ஹிட்' படம்! ஹீரோவாக ஹரிஷ் கல்யாண்...

Vijay Deverakonda's 'Super Hit' is a remake in Tamil! Harish Kalyan ...

  • விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் ஹிட்டான பெல்லி சூப்லு திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தற்போது தயாராக உள்ளது.
  • இப்படத்தில் ஹீரோவாக ஹரிஷ் கல்யாணும் , ஹீரோயினாக பிரியா பவானி சங்கரும் நடிக்க  உள்ளனர்.
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் ஹிட்டான திரைப்படம் பெல்லி சூப்லு. இத்திரைப்படம் ஏற்கனவே தமிழில் தயாராக அறிவிக்கப்பட்டிருந்தது. அப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்க உள்ளதாகவும், விஷ்ணு விஷால் - தமன்னா ஆகியோர் நடிக்க உள்ளனர் எனவும், இப்படத்திற்கு பெண் ஒன்று கண்டேன் என்று தலைப்பு வைக்கப்பட்டதாகவும் சில வருடங்களுக்கு முன்பே தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் அப்படம் கடைசியில் கைவிடபட்டுவிட்டது என கூறப்பட்டது. தற்போது அதே பட ரீமேக்கில் விஜய் தேவர்கொண்டா கதாபாத்திரத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்க உள்ளாராம். பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடிக்க உள்ளாராம். விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைக்க, இப்படத்தை புதுமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் என்பவர் இயக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை அண்மையில் போடப்பட்டு ஷூட்டிங் தொடங்கி உள்ளது.

  • The Tamil remake of the hit Hindi film Belle Suflu starring Vijay Deverakonda is currently ready.
  • Harish Kalyan as the hero and Priya Bhavani Sankar as the heroine.
Belly Zuplu is a hit movie starring Vijay Deverakonda in Telugu. The film has already been announced in Tamil. It was reported some years ago that Gautham Vasudev Menon is set to star in the film and Vishnu Vishal and Tamanna will be starring in it. But the film was reportedly abandoned. Harish Kalyan is currently playing the role of Vijay Devarkonda in the remake of the same film. Priya Bhavani Shankar plays the heroine. Vishal Chandrasekhar will direct the film with newcomer Karthik Sundar. The film has recently been shot and the shooting is underway.