நடிகையின் கிண்டலான கேள்விக்கு பதிலளித்த ஹர்திக் பாண்டியா..!

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்கு  கடந்த வெள்ளிக்கிழமை அறுவை

By Fahad | Published: Apr 07 2020 12:59 AM

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்கு  கடந்த வெள்ளிக்கிழமை அறுவை சிகிச்சை நடந்தது. இவருக்கு தென்னாபிரிக்கா அணியுடனான டி20 தொடரில் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை செய்துள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஹர்திக் பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில் அறுவை  சிகிச்சை செய்த புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.உங்களின் ஆதரவுக்கு நன்றி விரைவில் திரும்புவேன் என பதிவிட்டிருந்தார். இதற்கு ரசிகர்கள் குணமடைய வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவின் பதிவுக்கு பாலிவுட் நடிகையை இசபெல்லா ஒரு கேள்வியை கேட்டுள்ளார். அதில் " நீங்கள் கையில் கடிகாரம் கட்டி கொண்டுதான் அறுவை சிகிச்சை செய்தீர்களா?" என  நகைச்சுவையாக கேட்டார். அதற்கு ஹர்திக் பாண்டியா "எப்போதுமே ஹா ஹா.." என பதிலளித்துள்ளார்.

Related Posts