தல , தளபதி படத்தின் தலைப்பை வைத்து கொள்ளையர்களை விரட்டிய தம்பதியை பாராட்டிய ஹர்பஜன்!

திருநெல்வேலி மாவட்டம் கடையம் பகுதியில் உள்ள  கல்யாணிபுரத்தில் சண்முகவேல்

By murugan | Published: Aug 13, 2019 07:19 PM

திருநெல்வேலி மாவட்டம் கடையம் பகுதியில் உள்ள  கல்யாணிபுரத்தில் சண்முகவேல் என்பவர் தோட்டத்து வீட்டில் இரண்டு முக மூடி திருடர்கள் நுழைந்தார்கள்.அப்போது அதில் இருந்த ஒரு திருடன்  சண்முகவேல் கழுத்தில் துண்டு வைத்து நெரித்தார். அந்த திருடனிடம் இருந்து தப்பிக்க சண்முகவேல் போராடி கொண்டு இருந்தார்.அப்போது அவரது மனைவி செந்தாமரை வீட்டின் முன் இருந்த செருப்பு , சேர் போன்றவை கொண்டு அந்த திருடர்களை தாக்கினர். பின்னர் சண்முகவேல் தப்பித்து கணவர் -மனைவி இருவரும் தங்களிடம் கிடைத்த பொருள்களை கொண்டு அந்த இரண்டு திருடர்களை தாக்கினர்.இந்த காட்சி அவர்கள் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.அந்த காட்சிகள் இணைத்தளத்தில் வைரலாக பரவியது. கணவர் -மனைவியின் வீரத்தை பலர் பாராட்டினர்.இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் , சென்னை அணியின் சுழல் பந்து வீச்சாளருமான ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ஒரு பதிவு பதிவிட்டு உள்ளார். அந்த பதிவில் " திருட்டு பசங்க எல்லாத்துக்கும் இந்த வீடியோ பாத்தா அல்லு விடும்.என்ன #வீரம் பாசத்துக்கு முன்னாடி நான் பனிபகைக்கு முன்னாடி #புலி ன்னு சொல்ர மாதிரி #மெர்சல் காட்டிட்டாங்க.இது தமிழனின் #நேர்கொண்டபார்வை "Hats-off to the elderly couples of Thirunelveli who fought with Robbers  என பதிவிட்டு உள்ளார்.  
Step2: Place in ads Display sections

unicc