தலைமுடியை வெட்டி வாழ்க்கையை மாற்றும் அஞ்சலி.! வித்தியாமான லுக்கில் அட்டகாசமான புகைப்படங்கள்.!

தலைமுடியை வெட்டி வாழ்க்கையை மாற்றும் அஞ்சலி.! வித்தியாமான லுக்கில் அட்டகாசமான புகைப்படங்கள்.!

ஷார்ட் ஹேரில் வித்தியாசமான லுக்கில் உள்ள அஞ்சலியின் ஸ்டைலிஷ் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

ஜீவாவின் கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அஞ்சலி. அதனையடுத்து அவர் நடித்த அங்காடி தெரு படம் தான் இவரை தமிழ் சினிமாவில் நிலை நாட்டியது என்று கூறலாம். மேலும் பல தெலுங்கு, கன்னடம் படங்களிலும் நடித்துள்ளார். அதனையடுத்து பல படங்களில் நடித்து வந்த இவர், அண்மையில் குடும்ப பிரச்சினை காரணமாக படங்களில் நடிக்கவில்லை. சமீபத்தில் ரீ என்ட்ரி கொடுத்த இவர் சிந்துபாத், நாடோடிகள் 2 படத்திலும் நடித்தார். தற்போது அனுஷ்காவின் நிசப்தம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த நிலையில், அடிக்கடி தனது செல்ல பிராணியுடன் இருப்பதை போன்ற போட்டோக்களையும், போட்டோஷூட் நடத்தி அழகான புகைப்படங்களையும் வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர் அஞ்சலி. இந்த நிலையில் தற்போது அஞ்சலி முடியை வெட்டி ஷார்ட் ஹேரில் அட்டகாசமான ஸ்டைலிஷ் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.அதனுடன் ஒரு பெண் தலைமுடியை வெட்டுகிறாள் என்றால் தன் வாழ்க்கையை மாற்ற போகிறாள் என்று பதிவிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

 

Join our channel google news Youtube