ஜப்பானை தாக்க உள்ள சக்தி வாய்ந்த புயல் ! எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

ஜப்பானில் ‘ஹகிபிஸ்’ புயல் காரணமாக கடந்த 61 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான

By Fahad | Published: Apr 01 2020 05:45 PM

ஜப்பானில் ‘ஹகிபிஸ்’ புயல் காரணமாக கடந்த 61 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இயற்கை சீற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் உலக நாடுகளில் ஓன்று ஜப்பான்.கடுமையான அழிவுகளை பலமுறை சந்தித்துள்ளது ஜப்பான்.அந்த வகையில் தான் தற்போது ஜப்பானை புயல் தாக்க வாய்ப்பு உள்ளது என்று அந்நாட்டு  வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதாவது  இன்னும் ஓரிரு தினங்களில்  ஜப்பானில் ‘ஹகிபிஸ்’ (Hagibis) எனும் சக்திவாய்ந்த புயல் தாக்க உள்ளது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 61 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான மழையை இந்த புயல் காரணமாக ஜப்பான் சந்திக்க இருக்கிறது என்று தெரிவித்துள்ளது .மேலும் இந்த மழையால் பெரு வெள்ளம், பயங்கர நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம்.