எந்த மொழியை படிக்க வேண்டும் என்பதை படிப்பவர்கள் முடிவு செய்யட்டும்! கனிமொழிக்கு எச்.ராஜா பதில்!

அஞ்சல் துறையில் வரும் சில காலிப்பணியிடங்களுக்கு முதல் நிலை தேர்வு முதலில் அந்தந்த மாநிலங்களில் பிராந்திய மொழிகளில் நடைபெற்றது. தற்போது முதல்நிலை தேர்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே இருக்கும் என் அறிவிப்பு வெளியானது.

இதனை பலரும் எதிர்த்து கருத்து கூறி வருகின்றனர். தூத்துக்குடி தொகுதி எம்பி கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ எதை உண்பது என்பதை தீர்மானிப்பது உண்பவர் மட்டுமே. மற்றவர்கள் அல்ல.’ என பதிவிட்டு இருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ உண்மை சகோதரி. எந்த மொழியை படிக்க வேண்டும் என்பதையும் படிப்பவர் முடிவு செய்ய வேண்டும். உங்கள் குடும்பமல்ல.’ என கூறியுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.