'அனைத்து ஆவணங்களும் எனது ஹெல்மெட்டில் உள்ளது'! போலீசாருக்கே ஷாக் கொடுக்கும் பைக் மனிதர்!

தற்போது இந்தியாவில் வாகனசட்டம் கடுமையாக்கப்பட்டு, அபராதங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

By Fahad | Published: Mar 28 2020 11:56 AM

தற்போது இந்தியாவில் வாகனசட்டம் கடுமையாக்கப்பட்டு, அபராதங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஓட்டுனர்கள் லைசன்ஸ், ஆர்.சி புக், இன்சூரன்ஸ் ஆகிய அனைத்து முக்கிய ஆவணங்களையும் வைத்து கொண்டும் ஹெல்மெட் போட்டுக்கொண்டும் ஒட்டி வருகின்றனர். பெரும்பாலான இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் போட்டுகொண்டு வாகனம் ஒட்டி வருகின்றனர். இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் வடோரா மாநிலத்தை சேர்ந்த இருசக்கர வாகன ஒட்டி, தனது லைசன்ஸ், ஆர்சி புக் காப்பி, இன்சூரன்ஸ் காப்பி என இம்மூன்றையும் தனது ஹெல்மெட்டில் ஒவ்வொரு பக்கமும் ஒட்டி வைத்துவிட்டார். போலீசார் வழிமறிக்கையில் இதனை காண்பித்து விட்டு சென்று விடுகிறார். இந்த வித்யாசமான யோசனை கொண்ட மனிதர் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறார்.

More News From new traffic rules