ஊரடங்கின் காரணமாக ஜிஎஸ்டி செலுத்த மூன்று மாத கால அவகாசம்... தனது இணைய பக்கத்தில் சிபிஐசி தகவல்...

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு

By kaliraj | Published: May 07, 2020 12:37 PM

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு மேலும் மே 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில், தொழில் நிறுவனங்கள் தங்கள் வருடாந்திர ஜிஎஸ்டி கணக்கை ஜூன் இறுதிக்குள் தாக்கல் செய்வது என்பது மிகவும் கடினம் மற்றும் இயலாத ஒன்று. எனவே, தொழில் நிறுவனங்களின் சிரமங்களைப் புரிந்துகொண்டு, அவா்கள் வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு கூடுதலாக 3 மாதங்கள், அதாவது செப்டம்பா் மாத இறுதி வரை அவகாசம் அளிக்கப்படுகிறது என மத்திய சுங்கம் மற்றும் மறைமுக வரிகள் வாரியம் (சிபிஐசி) தனது சுட்டுரைப் பக்கத்தில் நேற்று புதன்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதேபோல், கடந்த மாா்ச் 24 அல்லது அதற்கு முன்பு உருவாக்கப்பட்ட மின்னணு ரசீது, மே 31-ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என்று அந்த சுட்டுரைப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்துக்கு மின்னணு ரசீது முறையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், மாா்ச் 24-ஆம் தேதிக்கு முந்தைய மின்ணு ரசீது செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்கு சென்றே பல நாட்களாகும் நிலையில் அரசு ஜிஎஸ்டி தாக்கல் செய்ய அவகாசம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Step2: Place in ads Display sections

unicc