பாகிஸ்தானின் குருத்வாராவில் கொலைவெறி தாக்குதல்.. இந்திய அரசு கடும் கண்டனம்.. இந்திய தலைவர்களும் கடும் கண்டனம்..

  • பாகிஸ்தானில் சீக்கிய குருத்வாராவில் கொலைவெறி தாக்குதல்.
  • இந்திய தலைவர்கள் கடும் கண்டனம்.
     சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான சீக்கிய மதகுருவான  குருநானக் சிங், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நன்கானா சாகிப் என்ற இடத்தில் பிறந்தாா். அவரது நினைவாக அங்கு அவருக்கு குருத்வாரா கட்டப்பட்டுள்ளது. அங்கு முக்கிய விழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்நிலையில், அந்தப் பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் நேற்று அந்த குருத்வாரா மீதும், அங்கு வந்த சீக்கிய யாத்ரீகா்கள் மீதும் கற்களை வீசி கொடூரமாக தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது. இந்த கொடூர தாக்குதல் சம்பவத்திற்க்கு  இந்தியா சார்பில் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.  இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புனித தலத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு இந்தியா சார்பில் கடும் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது. பாகிஸ்தான் நாட்டு சிறுபாண்மையினரான சீக்கிய மதத்தவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடியாக பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங் தனது  டுவிட்டரில் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்த விஷயத்தில் தலையிட்டு சீக்கிய யாத்ரீகர்களை தாக்குதல் நடத்தும் கும்பலிடம் இருந்து உடனடியாக குருதுவாராவையும் யாத்ரீகர்களையும் பாதுகாக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும்  கண்டனம் தெரிவித்துள்ளார்.அதில், நன்கானா சாகிப் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது.
author avatar
Kaliraj