வன்முறையை வளர்க்கிறது பப்ஜி ! தமிழக அரசு தடை செய்யவேண்டும் – ராமதாஸ்

வன்முறையை வளர்க்கிறது பப்ஜி ! தமிழக அரசு தடை செய்யவேண்டும் – ராமதாஸ்

ப‌ப்ஜி இணைய ஆட்டத்தை தமிழக அரசு தடை செய்யவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் மட்டும் அல்லாமல் இந்தியாவும்  தற்போது ஸ்மார்ட் போன் என்ற சிறிய உலகத்தில் பயணித்து வருகிறது.2017 ஆம்  ஆண்டு மார்ச் மாதம் உலகம் முழுவதும் அறிமுகமான பப்ஜி(PUBG -playerUnknown’s Battlegrounds, popularly) விளையாட்டு இளைஞர்கள், குழந்தைகள் உட்பட அனைத்து  தரப்பினரின் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த விளையாட்டை இந்தியா முழுவதும் தடை  செய்ய வலியுறுத்தி பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.காரணம் என்னவென்றால் பெரும்பாலான இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளனர்.
இந்த  நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் பப்ஜி என்ற விளையாட்டு வேகமாக பரவி வருகிறது.இந்த விளையாட்டு மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரையும் அடிமையாக்கி, அவர்களின் எதிர்காலத்தை  கேள்விக்குறியாக்குவது கவலையளிக்கிறது.
மேலும் இளைஞர்களின் கல்வியை சீரழித்து வன்முறையை வளர்க்கும் ப‌ப்ஜி இணைய ஆட்டத்தை தமிழக அரசு தடை செய்யவேண்டும்.இந்திய அளவில் தடை செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்  என்றும் தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube