குரூப்-4 விசாரணை நியாயமாக நடைபெற அமைச்சர் ஜெயக்குமாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் – மு.க.ஸ்டாலின் அறிக்கை

குரூப்-4 விசாரணை நியாயமாக நடைபெற அமைச்சர் ஜெயக்குமாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் – மு.க.ஸ்டாலின் அறிக்கை

குரூப்-4 தேர்வு முறைகேடுகள் குறித்து உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டு, விசாரணை நியாயமாக நடைபெறுவதற்கு, துறை அமைச்சர் ஜெயக்குமாரை ‘டிஸ்மிஸ்’ செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு  கடந்த ஆண்டு நடைபெற்ற நிலையில் இந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.இதன் அடிப்படையில்,தேர்வாணையம் நடத்திய விசாரணையில், 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்தது,மேலும் அவர்களுக்கு வாழ்நாள் முழுதும் தேர்வு எழுத கூடாது என்ற தடையும் விதிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டும் வருகின்றனர்.எனவே நேற்று டி.என்.பி.எஸ்.சி குரூப்-4  தேர்வு முறைகேடு தொடர்பாக அதிகாரிகளுடன், அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,டி.என்.பி.எஸ்.சி முறைகேடுகளை தவிர்க்கும் விதமாக பயிற்சி மையங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் தொடர்பாக தனி மசோதா வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும்.குரூப்-4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட அனைத்து கருப்பாடுகளும் களையெடுக்கப்பட்டு, எதிர்காலத்தில் கருப்பாடுகளே இல்லாத நிலையை தமிழக அரசு உருவாக்கும்.தேர்வை ரத்து செய்ததால் ஞாயமாக தேர்வு எழுதியவர்களின் நிலை என்னாவது என்றும் கேள்வி எழுப்பினார்.  ஒரு சில மையங்களில் நடந்த முறைக்கேட்டால் ஒட்டுமொத்தமாக குறைகூற கூடாது.தரவரிசைப் பட்டியலில் அடுத்த நிலையில் இருப்பவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படும் என்று தெரிவித்தார். 

 

இந்நிலையில் குரூப்-4 தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், குரூப்-4 தேர்வு முறைகேடுகள் குறித்து உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டு, விசாரணை நியாயமாக நடைபெறுவதற்கு, துறை அமைச்சர் ஜெயக்குமாரை ‘டிஸ்மிஸ்’ செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ,முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் , ” தரகர்களின் புகலிடமாக மாற்றப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. குரூப்-4 தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகள்” வெளிச்சத்திற்கு வந்து, அதன் காரணமாக, தமிழக இளைஞர்கள் இந்த ஆணையத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை தகர்க்கப்பட்டிருந்த நேரத்தில், இன்றைய தினம், 113 மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்கு 33 விண்ணப்பதாரர்களை நேர்முகத்தேர்வுக்கு அழைத்த பட்டியலை சென்னை ஐகோர்ட்டே ரத்து செய்திருப்பது, அ.தி.மு.க. ஆட்சியின் அவலட்சணங்களின் முத்தாய்ப்பாக விளங்குகிறது.இது தொடர்பான  விசாரணையை உயர்நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் நடத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இல்லாவிட்டால், தி.மு.க. இளைஞரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

Join our channel google news Youtube