இந்த வருடம் 30 முதல் 50 சதவீதம்! அடுத்த வருடம் 100 சதவீதம்! பசுமை பட்டாசு விற்பனை அமோகம்!

வரும் ஞாயிற்று கிழமை தீபாவளி பண்டிகை வருவதால் அதனை கொண்டாட மக்கள் கோலாகலமாக

By manikandan | Published: Oct 21, 2019 03:30 PM

வரும் ஞாயிற்று கிழமை தீபாவளி பண்டிகை வருவதால் அதனை கொண்டாட மக்கள் கோலாகலமாக தயாராகி வருகின்றனர். துணிக்கடைகள், பட்டாசு கடைகள், அத்திவாசியா பொருட்கள் என மக்கள் கூட்டம் அனைத்து இடங்களிலும் அதிகமாக இருக்கிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிப்பதால் அதிக அளவு மாசு ஏற்படுவதாக கூறி, பட்டாசு வெடிக்க தடைவிதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இதனை அடுத்து உச்சநீதிமன்றமானது பட்டாசு தயாரிப்பாளர்களை சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்காதபடி பசுமை பட்டாசு தயாரிக்க அறிவுறுத்தியது. உச்சநீதிமன்ற அறிவிவுரையை ஏற்று, மத்திய அரசின் வெடிபொருள் தயாரிப்பு துறை, பசுமை பட்டாசு தயாரிப்பதற்கான பார்முலாவை வழங்கியது. இந்த பார்முலா விலை அதிகமாக இருப்பதால், பெரிய பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலையில் மட்டும் இந்த வருடம் பசுமை பட்டாசு தயாரித்தனர். இந்த வகை பட்டாசுகளில் க்ரீன் கிரேக்கர்ஸ் என எழுதப்பட்டிருக்கும் . இந்த வகை பட்டாசு இந்த வருடம் 30 முதல் 50 சதவீதம் வரை விற்பனைக்கு வந்துள்ளது.எனவும், அடுத்த வருடம் 100 சதவீதம் வழங்கப்படும் எனவும் பட்டாசு ஆலைகள் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
Step2: Place in ads Display sections

unicc