மாபெரும் வெட்கக் கேடு! மாறாத தலைகுனிவு! மகாராஷ்டிரா அரசியல் குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து

மாபெரும் வெட்கக் கேடு! மாறாத தலைகுனிவு! மகாராஷ்டிரா அரசியல் குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து

மாபெரும் வெட்கக் கேடு,மாறாத தலைகுனிவு  என்று மகாராஷ்டிரா அரசியல் குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களாக  மகாராஷ்டிரா அரசியலில் குழப்பம் நிலவி வந்த நிலையில் இன்று அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றார். இந்த நிலையில் இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவிட்ட பதிவில்,மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ள அரசியல் ரீதியான அருவருப்பை, அநாகரிகம் என்பதா, அசிங்கம் என்பதா, எதனோடு ஒப்பிடுவது? "ஜனநாயகப் படுகொலை" என்று சொல்வதுகூடச் சாதாரணமான சொல்லாகிவிடுமோ - நடந்திருப்பதின் கடுமையைக் குறைத்துவிட்டதாகி விடுமோ, என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. அரசியல் சட்ட நெறிமுறைகளையே காலில் போட்டு மிதித்துக் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு, மாநில ஆளுநரைத் தலையாட்டி பொம்மையாக்கி, குடியரசுத் தலைவர் மாளிகை மூலமாகவும் இறுதியில் மறைமுக மிரட்டல்கள் மூலமாகவும், ஆட்சியில் உட்கார்ந்திருப்பதை என்ன பாணி அரசியல் என்பது? - பாஜக சித்து விளையாட்டு என்பதா?
இந்திய ஜனநாயகத்தின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது. இது மாபெரும் வெட்கக் கேடு! மாறாத தலைகுனிவு! என்று தெரிவித்துள்ளார்.
 

Latest Posts

பிரான்ஸ் நாட்டு தேவாலயத்தில் பயங்கரம்... தீவிரவாதி வெறிச்செயல்.. தலையை துண்டித்த கொடூரம்...
ஆந்திராவில் நவம்பர் 2-ம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும்... மாநில அரசு அறிவிப்பு...
ஒப்புதல் அளிக்காத ஆளுநர்... சட்டமாக்கிய அரசு... அரசாணை வெளியிட்டு அதிரடி....
மிலாடி நபி திருநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் வாழ்த்து...
#7.5%-Reservation: இதற்கு ஏன் 45 நாட்கள் தாமதம் ? ஏன் கிடப்பில் போட்டார்கள் ? - மு.க.ஸ்டாலின் டீவீட்
ஜம்மு-காஷ்மீர் பயகங்கரவாத தாக்குதலில் பாஜாகவினர் மூவர் பலி
#IPL2020 : கெய்க்வாட் அரைசதம் ! கடைசி பந்தில் சென்னை அணி வெற்றி
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு -அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
நிதிஷ் ராணா அதிரடி.. 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கவுள்ள சென்னை!
டாஸ் வென்ற சென்னை.. முதலில் பேட்டிங் செய்ய காத்திருக்கும் கொல்கத்தா!