கௌதம் மேனனின் புதிய படைப்பிற்கு வந்த புதிய சோதனை!

கௌதம் மேனனின் புதிய படைப்பிற்கு வந்த புதிய சோதனை!

  • queen |
  • Edited by Mani |
  • 2019-12-09 18:34:18
  • கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் குயின்.
  • இந்த வெப் சீரிஸ் வெளியிடக்கூடாது என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நீண்ட சில வருடங்கள் கழித்து தற்போது தான் எனை நோக்கி பாயும் தோட்டா படம் ரிலீசாகி உள்ளது. அடுத்ததாக அவர் இயக்கத்தில் ஜோஸ்வா எனும் திரைப்படம் தயாராகி வருகிறது. இதற்கிடையில் குயின் எனும் இணையதள வெப் சீரிஸை இயக்கி முடித்துள்ளார். இந்த வெப்சீரிஸ் வரும் 13ம் தேதி MX ப்ளேயர்-இல் வெளியாக உள்ளது. இந்த சீரீஸ் முதலில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு என கூறப்பட்டது. ஆனால், படத்தின் இன்னொரு இயக்குனர் பிரசாந்த் முருகேசன் இது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கிடையாது என விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் எங்கள் குடும்ப உறுப்பினரான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றி இயக்கியுள்ள வெப்சீரிஸை எங்கள் அனுமதியின்றி வெளியிடக்கூடாது என குறிப்பிட்டிருந்தது. இந்த வழக்கில் இன்று விசாரித்த நீதிமன்றம் கெளதம் வாசுதேவ் மேனன் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.