கௌதம் வாசுதேவ் மேனன் படத்தில் 'குருதி புனல்' கதாசிரியர்! அடுத்தடுத்து வெளியாகும் மாஸ் அப்டேட்!

மின்னலே, காக்க, காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணை தாண்டி வருவாயா

By manikandan | Published: Nov 19, 2019 03:54 PM

மின்னலே, காக்க, காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணை தாண்டி வருவாயா என தனது படைப்புகள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்களை பெற்றவர் இயக்குனர் கெளதம் மேனன், ஆனால் இவரது  இயக்கத்தில் கடைசியாக தயாரான எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் இன்னும் வெளியாகமல் இருக்கிறது. அந்த படங்கள் நிதி பிரச்சனை தீர்ந்து விரைவில் ரிலீஸ் ஆக உள்ளன. இதனை தொடர்ந்து, ஜோஸ்வா எனும் ஆக்ஷன் படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் அடுத்த வருட பிப்ரவரியில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து, இதனை தொடர்ந்து மீண்டும் ஐசரி கணேசன் தயாரிப்பில் சூர்யாவை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் அனுஷ்காவை நாயகியாக கமிட் செய்ய படக்குழு ஆலோசித்து வருகிறதாம். இதனை தொடர்ந்து மீண்டும் மூன்றாவது முறையாக ஐசரி கணேசன் தயாரிப்பில் கதாநாயகியை மையப்படுத்திய ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த நாயகிக்கு முக்கியதுவம் உள்ள கதாபாத்திரத்தில் அனுஸ்காவை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்திற்கு கதையினை பாலிவுட் இயக்குனர் ஒருவர் எழுத உள்ளார். இவர் கமல் நடிப்பில் வெளியாக விமர்சகர்கள் மத்தியில் பாராட்டை பெற்ற குருதி புனல் படத்திற்கும் இவர்தான் கதை எழுதி இருந்தாராம்.
Step2: Place in ads Display sections

unicc