ஆம்னி பேருந்து கட்டணம் உயர வாய்ப்பு!வரி விதிக்க அரசு முடிவு

இன்று தமிழக சட்டப்பேரவை நடைபெற்றது.பேரவையில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் படுக்கை வசதிகொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு புதிதாக மசோதா ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மசோதாவில்,  ஆம்னி பேருந்துகளில்  இருக்கை வசதிக்கு  மாதம் ரூ.2 ஆயிரம் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது,மேலும்  படுக்கை வசதியுடைய ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.2,500 என புதிதாக வரி விதிக்கும் என்று  மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால்   ஆம்னி பேருந்துகளில்  கட்டணம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.