14 தொழில் பிரிவினருக்கு ரூ.1000 வழங்கும் அரசாணை வெளியீடு.!

அரசால் அங்கீகரிக்கப்பட்ட 14 தொழில் பிரிவினருக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.1000 வழங்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மீனவர்கள், சிறு வணிகர்கள், திரைத்துறை தொழிலாளர்கள் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 14 தொழில் பிரிவினருக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.1000 வழங்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் மத்திய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து 86.05 கோடி நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் சுமார் 8 லட்சத்து 60 ஆயிரத்து 536 தொழிலார்களா பயனடைவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் ஊரடங்கு காலம் நீடிக்கப்பட்டதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்கள் பொருளாதாரத்தை இழந்து தவித்து வருகின்றன. இதன் காரணமாக தமிழக அரசு அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழில் பிரிவினருக்கு ரூ.1000 வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்