8ஆம் தேதி முதல் சென்னையில் பேருந்துகள் இயக்கம்.! இவர்களுக்காக மட்டும்.!

8ஆம் தேதி முதல் சென்னையில் பேருந்துகள் இயக்கம்.! இவர்களுக்காக மட்டும்.!

ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஊழியர்கள் பள்ளிகளுக்கு வந்துசெல்ல ஏதுவாக வருகின்ற 8-ஆம் தேதி முதல் சென்னையில் பேருந்துகள் இயக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா அறிவித்துள்ளார்.  

சென்னை தவிர பிற மண்டலங்களில் பேருந்து இயக்கம் அந்தந்த மண்டலங்களுக்குள் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், வரும் ஜூன் 15 முதல் தமிழகம் முழுவதும் 10, 11, 12 வகுப்பு தேர்வுகள் தொடங்க உள்ளது.

இதன் காரணமாக  சென்னையில் 41 வழித்தடங்களில் அரசுப்பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்துகள் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா கூறியுள்ளார். ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஊழியர்கள் பள்ளிகளுக்கு வந்துசெல்ல ஏதுவாக வருகின்ற 8-ஆம் தேதி முதல் சென்னையில் பேருந்துகள் இயக்கப்படும் என கூறியுள்ளார். 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube