கர்நாடகா நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார் ஆளுனர் வஜுபாய் வாலா !

கர்நாடகாவில் நிகழும் அரசியல் சூழல் குறித்து மத்திய அரசுக்கு அம்மாநில ஆளுநர் வஜூபாய் வாலா அறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகாவில் ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 16 பேர் தங்களுக்கு இந்த அரசு மேல் நம்பிக்கை இல்லை என்று கூறி தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் பெரும்பான்மை குறைந்து ஆட்சி கவிழும் சூழல் உருவாகியது. இவர்களது ராஜினாமா கடிதத்தை கர்நாடக சட்டமன்ற சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்கவில்லை. இது தொடர்பாக, டெல்லி உச்ச நீதிமன்றத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ க்கள் வழக்கு தொடந்து இருந்தனர்.

இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் சபாநாயகர் முடிவில் தலையிட முடியாது என்று கூறினார். சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பாஜக கூறி இருந்த நிலையில், அதுவும் நடக்கவில்லை. மேலும், ஆளுநர் 2 முறை  உத்தரவிட்டும் சபாநாயகர் அதற்க்கு எந்தவித நடவடிக்கையும் செய்யவில்லை. தற்போது ஆளுநர் இது தொடர்பாக மத்திய அரசுக்கு அறிக்கை ஓன்று அனுப்பி இருக்கிறார்.