சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் திறப்பு பற்றி அரசு முடிவெடுக்கும் – அமைச்சர் காமராஜ்

சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் திறப்பு பற்றி அரசு முடிவெடுக்கும் – அமைச்சர் காமராஜ்

சென்னையில் மார்க்கெட் திறப்பு பற்றி அரசு முடிவெடுக்கும்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் இருந்து வந்தது.

இதனால், சென்னையில் உள்ள பிரபல கோயப்பெடு மார்க்கெட் தாளிக்கமாக மூடப்பட்டு, திருமழிசைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், தற்போது சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், கோயம்பேடில் சந்தை மீண்டும் திறப்பட்ட வேண்டும் என வியாபாரிகள் அறிவுறுத்தினார்.

இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையை திறக்க வலியுறுத்தி வரும் 10 ஆம் தேதி தமிழகம் முழுவதும் காய்கறி மற்றும் பூ மார்க்கெட் மூடப்படும் என வணிகர் சங்க பேரமைப்பு அறிவித்துள்ள நிலையில், இதுகுறித்து பேசிய அமைச்சர் காமராஜ், சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு கோயம்பேடு மார்க்கெட் திறப்பு பற்றி அரசு முடிவெடுக்கும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube