தமிழக அரசின் கடன் ரூ.4,56,660.99 கோடி.! துணை முதல்வர் தகவல்.!

தமிழக அரசின் 2020-2021 பட்ஜெட்டை துணைமுதல்வர் ஓ.பன்னிர்செல்வம் தாக்கல் செய்தார்.

By balakaliyamoorthy | Published: Feb 14, 2020 10:41 AM

தமிழக அரசின் 2020-2021 பட்ஜெட்டை துணைமுதல்வர் ஓ.பன்னிர்செல்வம் தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக அரசின் இந்த ஆண்டுக்கான கடைசி முழுமையான பட்ஜெட் இன்று தாக்கல் 10வது முறையாக தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். அதிமுக அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. தமிழக பட்ஜெட்டை அதிகமுறை தாக்கல் செய்தவர் ஓ. பன்னீர்செல்வம் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் பட்ஜெட் தாள்கள் அடங்கிய பெட்டியில் ஜெயலலிதாவின் புகைபடம் அச்சிடப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் தாக்கலில், தமிழக அரசின் கடன் ரூ.4,56,660.99 கோடியாகவும், வருவாய் பற்றாக்குறை ரூ.25.71 ஆயிரம் கோடியாகவும் துணை முதல்வர் தகவல் தெரிவித்தார்.
 • நீரை சிக்கனமாக பயன்படுத்தும் திருந்திய நெல் சாகுபடி முறை 27.18 லட்சம் ஏக்கராக விரிவுபடுத்தப்படும்.
 • 2020-21 நிதியாண்டுக்கான தமிழக அரசின் மூலதன செலவு ரூ.36,367.78 கோடியாக இருக்கும்.
 • காவல்துறைக்கு - ரூ.8876 கோடி ஒதுக்கீடு.
 • சிறைச்சாலை துறைக்கு ரூ.392 கோடி ஒதுக்கீடு.
 • தமிழ் வளர்ச்சி துறைக்கு ரூ.74 கோடி ஒதுக்கீடு .
 • உணவுத்துறைக்கு ரூ.6,500 கோடி ஒதுக்கீடு.
 • நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5,306 கோடி ஒதுக்கீடு.
 • மீன்வளத்துறைக்கு ரூ.1,229 கோடி ஒதுக்கீடு.
 • நீர் பாசனத்திற்காக ரூ.6,991 கோடி ஒதுக்கீடு.
 • கால்நடைத்துறைக்கு ரூ.199 கோடி ஒதுக்கீடு.
 • நீதி நிர்வாகத்திற்கு ரூ.1,403 கோடி ஒதுக்கீடு.
Step2: Place in ads Display sections

unicc