கப்பலில் இருப்பவர்களுக்கு இலவசமாக 2000 ஐபோன்களை வழங்கிய ஜப்பான் அரசு.!

  • ஜப்பான் துறைமுகத்திற்கு திரும்பிய டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக, கப்பலில் உள்ள பயணிகளுக்கு 2,000 ஐபோன்களை ஜப்பான் அரசு இலவசமாக வழங்கியுள்ளது.

ஹாங்காங் சென்று ஜப்பான் துறைமுகத்திற்கு திரும்பிய டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் 3,700 பயணிகள் இருக்கிறார்கள். அந்தக் கப்பலில் கொரானா தொற்றால் முதியவர் ஒருவர் பலியானது அதிர்ச்சியை அளித்தது. இதைத்தொடர்ந்து அந்த கப்பலில் 355 பேருக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்த நிலையில், மேலும் 99 பேருக்கு புதிதாக இந்த வைரஸ் தாக்கிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த கப்பல் யோகோஹாமா பகுதியில் தனிமைப்படுத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக, கப்பலில் உள்ள பயணிகளுக்கு 2,000 ஐபோன்களை ஜப்பான் அரசு இலவசமாக வழங்கியுள்ளது. குறிப்பாக இலவச ஐபோன்களை வழங்குவதற்கு நோக்கம் என்னவென்றால், சிக்கித் தவிக்கும் பயணிகளை மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கவும், மருந்துகள் குறித்த அறிவுறுத்தல்களை பெறுவதற்காகவும் லைன் ஆப் எனும் செயலி இன்ஸ்டால் செய்யப்பட்டு இந்த ஐபோன்கள் வழங்கப்பட்டுள்ளன என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்