தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை ! மொத்தம் 3 நாட்கள் தொடர் விடுமுறை

தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கள்கிழமையும் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடும் பண்டிகை ஆகும் .அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளி சிறப்பாக கொண்டாட இருக்கிறது.இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகின்ற  27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டு தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருகிறது.

இதனையொட்டி தமிழக அரசு தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கள்கிழமையும்(அக்டோபர் 28-ஆம் தேதி ) அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளது.தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள்,பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தும். அக்டோபர் 28-ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 9 ஆம் தேதி பணிநாள் என்று அறிவித்துள்ளது தமிழக அரசு.  இதனால் தீபாவளிக்கு சனி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை என 3 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.