அதிபராக இன்று பதவி ஏற்கிறார் கோத்தபய ராஜபக்க்ஷே என்று தகவல்!

இலங்கையில் சனிக்கிழமையானது அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் கோத்தபய

By Fahad | Published: Apr 06 2020 02:10 AM

இலங்கையில் சனிக்கிழமையானது அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் கோத்தபய ராஜபக்சே, மொத்தம் 69 லட்சத்து 24 ஆயிரத்து 225 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சஜித் பிரேமதாச 55 லட்சத்து 64 ஆயிரத்து 239 வாக்குகளை பெற்று இரண்டாம் இடதகுதி பிடித்தார். இலங்கை தேர்தல் ஆணையம் இந்த தேர்தலில், மொத்தமாக 5.76 விழுக்காடு வாக்குகளை பெற்றதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து கோத்தபய ராஜபக்சே அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், அனைத்து மக்களுக்குமான அதிபராக செயல்படுவதில் உறுதியாக இருப்பதாகவும், இப்பதவி தன் வாழ்நாளில் தனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் என பதிவிட்டுள்ளார். மேலும், தேசத்தின் கனவை நனவாக்குவதில் இணைந்து செயல்படுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

Related Posts