பாலியல் குற்றம்-ஈடுபட்டாலே பிறப்புறுப்பு அகற்றம்! நைஜீரியா அதிரடி சட்டம்..

உலகில் தலைவிரித்தாடும் பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோரின் பிறப்புறுப்பு அகற்றப்படும் என்று நைஜீரியா நாட்டில் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள நிலையில், நைஜீரியா நாட்டில் பாலியல் பலாத்கார வழக்குகளின் எண்ணிக்கை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், அந்த நாட்டில் சட்டங்களை கடுமையாக்க அந்நாடு முடிவு செய்தது. எனவே இந்த புதிய சட்டத்தின் படி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த  ஆண்களின் பிறப்புறுப்புகள் அகற்றப்படும் என அந்த சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல்  பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் எனவும்,  குழந்தைகளை பாலியல் பலாத்காரம்  செய்யும் பெண்களின் கருப்பை குழாய் எனப்படும் பாலோப்பியன் குழாய் அகற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து நைஜீரியாவின் கடுனா மாநில ஆளுநர் நசீர் அகமது  தெரிவித்துள்ளதாவது, ‘பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்க இந்த புதிய சட்டம் இயற்றப்பட்டது. ஏற்கனவே, பலாத்கார வழக்குகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், சிறுவர் பாலியல் துஷ்பிரயோக வழக்குகளில் குற்றவாளிகளுக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. புதிய சட்டப்படி பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆண்களின் பிறப்புறுப்பு குழாய் அகற்றப்படும் என்று எச்சரித்துள்ளார்.

author avatar
Kaliraj