கூகுளின்(Google) புதிய அறிவிப்பு: அண்ட்ராய்ட் ஆப்களை இன்ஸ்டால் செய்யாமலேயே பயன்படுத்தி பார்க்கலாம்.!

கூகுள் சமீபத்தில் (கடந்த‌ ஆண்டு) அறிமுகப்படுத்திய‌ Android Instant Apps அடிப்படையில் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது, கூகுள் பிளே ஸ்டோரில் ஆப்களின் எதிரே காணப்படும் Try Now பட்டனைக் கிளிக் செய்வதன் மூலம் செயலியை பயன்படுத்தி பார்க்கலாம் இன்ஸ்டால் பண்ணாமலே. தேவையென்றால் உங்கள் மொபைல் போனில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

முன்னர்போல முழுமையாக‌ டவுண்லோடு செய்தபின் பயன்படுத்திப் பார்க்க‌ நேரிடும் நேட்டிவ் ஏப்ஸ் (Native Android Apps) போலன்றி, உடனடியாக‌ ஒரு செயலியை அதன் URL -யை கிளிக் செய்தாலே போதுமானது. வேலை செய்யும்.

இதுபோல‌ கூஃகிள் தனது பிளே ஸ்டோரில் மொபைல் விளையாட்டுகளுகாக‌ Trailer மற்றும் Game Play Screen Shot போன்றவையும் சேர்த்துள்ளது . புதிதாய் மொபைல் விளையாட்டுகளுக்கென‌ பிரீமியம், பணம் செலுத்தி பயன்படுத்துவதற்கென தனிபகுதியும் வழங்க உள்ளது .

புதிதாக‌ அறிமுகப்படுத்தப்பட்டுள்ள‌ Try Now வசதியினை, தற்போது ஸ்டோரில் இருக்கும் ஏப் வழங்குனர்கள் மேம்படுத்திக் கொண்டால் “டிரை நவ்/ TRY NOW” செயலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் என தெரிய‌ வருகிறது. மேலும் பிளே ஸ்டோரின் முதற் ப‌க்கத்திலேயே டிரை நவ் செயலிகளை கூகுள் பரிந்துரைக்கவும் செய்கின்றது.

மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு.

Google’s new announcement: You can use Android apps without having to install it!

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment