பார்க்கிங் ஸ்லாட் எங்குள்ளது? இனி கூகுள் மேப்ஸில் பார்க்கலாம்!

பார்க்கிங் ஸ்லாட் எங்குள்ளது? இனி கூகுள் மேப்ஸில் பார்க்கலாம்!

  • பார்க்கிங் குழப்பத்தை தீர்க்க கூகுள் மேப்ஸ் புதிய தீர்வை கொண்டுவந்துள்ளது.
  • இது பார்க்கிங் ஸ்லாட் உள்ளதா என்பதை மட்டும் காட்டுமே தவிர அது காலியாக உள்ளதா என்பதை காட்டாது.

கார் ஓட்டுவோருக்கு இருக்கும் பெரிய தலைவலி, காரை எங்கு பார்க் செய்வது என்பதுதான். பொது இடங்களில் நாம் எங்கு பார்க் செய்யலாம் என்ற குழப்பம் அனைவருக்கும் ஏற்படும். இந்த குழப்பத்தை தீர்க்க, கூகுள் மேப்ஸ் ஒரு புதிய தீர்வை கொண்டுவந்துள்ளது.

கூகுள் மேப்ஸ் மூலம் அங்கு பார்க்கிங் ஸ்லாட் உள்ளது என்பதை மட்டுமே காட்டும். அது காலியாக உள்ளதா என்பதை காட்டாது. மேலும், இந்த அம்சத்தை பயன்படுத்த கூகுள் மேப்ஸை அப்டேட் செய்ய வேண்டும். அதன்பின், சீரான இணையதளம், மற்றும் முக்கியமாக உங்கள் மொபைலில் லொகேஷன் அக்டிவாக இருக்க வேண்டும்.

Image result for google maps gps

செய்யும் வழிமுறைகள்: 

  • முதலில் கூகுள் மேப்ஸில் நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்ற இடத்தை சரியாக குறிப்பிட வேண்டும்
  • அடுத்த, உங்களின் மொபைலின் கீலே, “டிரெக்‌ஷன்” எனும் வசதி இருக்கும். அதை தொடவும்.
  • அதன்பின், ஸ்டார்ட் பட்டன் இருக்கும் பகுதியில் ஸ்லைடு அப் செய்ய வேண்டும்
  • அங்கு P எனும் சின்னம் இருக்கும். அது, “Parking” என்பதை குறிக்கும்.

அதன்பின், நீங்கள் உங்களின் பயணத்தை தொடங்கலாம். இறுதியாக, மேப்ஸில் “P” எனும் சின்னம், வட்டமாக காட்டும். அதுதான் நீங்கள் பார்க் செய்யும் இடம் என்பதை கூறிக்கிறது.

Join our channel google news Youtube