கூகுள் பிளேஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட 28 போலி ஆப்ஸ்கள்! உங்க மொபைல்ல இருந்தா இப்போவே டெலீட் பண்ணிடுங்க..

உலகம் முழுக்க எப்படி குப்பை கொட்டி கிடக்கிறதோ அதே போன்று தான் இன்றைய நிலையில் தொழிற்நுட்ப குப்பையும் அதிக அளவில் சேர ஆரம்பித்துள்ளது. எண்ணற்ற ஸ்மார்ட் போன்கள், எக்கசக்க செயலிகள், ஏராளமான படைப்புகள் இப்படி பலவித வகையில் தொழிற்நுட்ப வளர்ச்சி சீறி பாய்ந்துள்ளது.

எவ்வளவு தான் வளர்ச்சி இருந்தாலும் எல்லாவற்றிலும் ஒரு சில போலிகள் இருக்கத்தானே செய்யும். இப்படிப்பட்ட போலிகள் நமது அந்தரங்க தகவல்களை சேகரித்து அதை வியாபாரமாக மாற்றி விடுகின்றன. அப்படித்தான் சமீபத்தில் சில செயலிகளும் செய்துள்ளன.

பிளே ஸ்டோர்
பலவித செயலிகள் இன்று பிளேஸ்டோரில் உலவி வருகின்றன. அவற்றில் பல போலியாக தான் உள்ளது. இந்த போலியான செயலிகளை தற்போது அடையாளம் கண்டு அதனை பிளேஸ்டோரில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கி உள்ளது.

எவ்வளவு?
சுமார் 28 வகையான போலி செயலிகளை கூகுள் நீக்கியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. இதில் மினி வால்லட், சிட் பண்ட்ஸ், கோல்ட் லோன், விர்ச்சுவல் டேட்டா போன்ற பல செயலிகள் அடங்கும். இவை உங்களை ஏமாற்றுவதற்காகவே வடிவமைக்க பட்டுள்ளது.

பாதிப்பு
இந்த போலி செயலிகள் உங்களுக்கே தெரியாமல் உங்களின் தகவல்களை திருடி அதிலிருந்து பல மடங்கு லாபம் சம்பாதிக்கும். மேலும், விளம்பரங்களை பகிர்ந்து அதிலிருந்தும் பணம் சம்பாதிக்கும். சில நேரங்களில் மோசமான பாதிப்புகளை கூட உங்களுக்கும், உங்கள் ஸ்மார்ட் போனுக்கும் ஏற்படுத்தும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Comment