கேப் பயணிகளுக்காக கூகுள் மேப்ஸ் வெளியிட்ட புதிய அம்சம்.. என்னவாக இருக்கும்?

கேப் பயணிகளுக்காக கூகுள் மேப்ஸ் வெளியிட்ட புதிய அம்சம்.. என்னவாக இருக்கும்?

  • கூகுள் மேப்ஸின் புதிய அம்சம்.
  • டிரைவர் மேப்பில் காட்டும் வழியை தவிர, வேறு பாதையில் பயணித்தால் உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும். 

நீங்கள் வெளியே செல்வதற்காக கேபில் செல்கிறீர்களா? டிரைவர் சரியான ரூட்டில் தான் வாகனத்தை ஓட்டுகிறாரா என்ற சந்தேகம் உங்களுக்கு எழுந்திருக்கும். ஆனால் இந்த சந்தேகத்திற்கு விடை அளிக்க கூகுள் மேப்ஸ் ஒரு அம்சத்தை வழங்கியுள்ளது. அது, ஆஃப் ரூட் அலர்ட் ஆகும்.

அதாவது கேப் டிரைவர் மேப்பில் காட்டும் வழியை தவிர, வேறு பாதையில் வாகனத்தை இயக்கினால் உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும்.

Image result for google maps Get off-route alerts

இயக்கும் வழிமுறைகள்:

  • முதலில் கூகுள் மேப்ஸ் செயலியை ஓபன் செய்யவேண்டும்.
  • அதன்பின், நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை தேடி, டைரெக்‌ஷன்ஸ் அம்சத்தை க்ளிக் செய்ய வேண்டும்.
  • அடுத்த, “டிரைவிங்” ஐகானை க்ளிக் செய்து, ஸ்டே சேஃபர் (Stay Safer) என ஒரு அம்சம் இருக்கும். அதை ஓபன் செய்யவேண்டும்.
  • அந்த ஆப்ஷனுக்கு கீழ், கேட் ஆப் ரூட் அலேர்ட்ஸ் (Get off-route alerts) எனும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
  • இவ்வாறு செய்தால், மேப்பில் காட்டும் வழியை தவிர, வேறு பாதையில் பயணித்தால் உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும்.
Join our channel google news Youtube