வாடிக்கையாளர்களின் பிரைவசி செட்டிங்கை பலப்படுத்த களமிறங்கிய கூகுள் .!புதிய அம்சங்கள் அறிமுகம்

வாடிக்கையாளர்களின் பிரைவசி செட்டிங்கை பலப்படுத்த களமிறங்கிய கூகுள் .!புதிய அம்சங்கள் அறிமுகம்

கூகுள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் தனியுரிமையை பலப்படுத்த புதிய அம்சங்களை செய்ய உள்ளது.
இது தொடர்பாக கூகுள் நிறுவனம் தெரிவிக்கையில் .,வாடிக்கையாளர்களின் தனியுரிமை பாதுக்காப்பை பலப்படுத்தும் முயற்சிகளில் கவனம் செலுத்தி புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் இணையத்தில் பயனர்களின் தனியுரிமை பாதுகாப்பு மிக அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது.இதன் மூலம் பயனர்கள் தங்களது கூகுள் அனுபவத்தை தொடர்ந்து கட்டுக்குள் வைத்து கொள்ளலாம்.மேலும் கூறுகையில் கூகுள் பயனர்களின் பிரைவேட் செட்டிங்  மற்றும் கண்ரோல் வசதிகளை அறிமுக செய்ய பணியாற்றி வருகிறது.
கூகுள் பயனர்கள் இலவச மற்றும் கட்டண சேவைகளை பயன்படுத்துவோர் சம  அளவில் தனியுரிமை பெற வேண்டும் என்றே  கூகுள் தனது சேவையை வழங்கி வருகிறது.
தற்போது வரும் புதிய அம்சங்களை பயனர் சேவைகள் மற்றும் பொருட்களில் கூகுள் அக்கவுண்டை பயன்படுத்தும் போது ஒரே கிளிக் செய்து அவற்றை இயக்கும் வசதி மற்றும் மேப்,,சர்ச்  என பல சேவைகளில் இன்கானிட்டோ மோட் வசதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

author avatar
kavitha
Join our channel google news Youtube