கொள்ளைநோய்க்கு குட்பை! நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் மூலிகை டீ

கொள்ளைநோய்க்கு குட்பை! நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் மூலிகை டீ

  • tea |
  • Edited by leena |
  • 2020-07-25 06:31:50
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் மூலிகை டீ.

இன்று நம்மை அச்சுறுத்தும் கொள்ளை நோய்கள் கண்டு நாம் பயப்படாமல் இருக்க, நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக காணப்பட வேண்டும். நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய உணவுகள் மற்றும் பாணங்களை அருந்துவதன் மூலம், நம்மை தீய வைரஸ் கிருமிகளிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

தற்போது இந்த பதிவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய மூலிகை டீ செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • இஞ்சி - சிறிய துண்டு
  • கிராம்பு - 3
  • துளசி இலை - 10
  • பட்டைப்பொடி - அரை ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு - அரை தேக்கரண்டி

செய்முறை

முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். சிறிய இஞ்சி துண்டை எடுத்து தோல் சீவி வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுடன் 3 கிராம்புகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன்பின் இஞ்சி மற்றும் கிராம்பு இரண்டையும் அம்மியில் வைத்து நன்கு நசுக்கிக் கொள்ள வேண்டும். பின் அடுப்பில்  அளவு தண்ணீர் சேர்த்து அதனுள், நாம் அரைத்து வைத்துள்ள இஞ்சி மற்றும் கிராம்பு இரண்டையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின் அதனுள் 10 துளசி இலைகளை சேர்த்து கொண்டு,  தண்ணீர் கொதித்தவுடன் சிறிதளவு பட்டை பொடியை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின் அடுப்பில் இருந்து இறக்கி டீயை ஆறவைத்து, அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும். இந்த டீயை தொடர்ந்து 4 நாட்கள் இரவு தூங்குவதற்கு முன் குடித்து வந்தால், உடலில் உள்ள கிருமிகள் அளிக்கப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மருத்துவ குணங்கள்

இஞ்சி 

இஞ்சி நமது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து, உடலில் சளி இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கிறது. மேலும் நுண்ணுயிரிகளுக்கு எதிராக போராடும் சக்தி இஞ்சியில் உள்ளது.

கிராம்பு 

கிராம்பு நமது உடலில் வெள்ளையணுக்கள் அதிகரிக்க செய்து, நமது உடல் ஆரோக்கியத்தை கெடுக்கக் கூடிய கிருமிகளிடம் இருந்து நம்மை பாதுகாக்கிறது. மேலும் இது கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் இது உதவுகிறது.

துளசிஇலை 

துளசியில், சளி மற்றும் இருமல் பிரச்சனைகளை போக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.

பட்டைப்பொடி 

பட்டையில், உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து, உடல் பலவீனத்தை நீக்குகிறது.

]]>